78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசிய கொடியுடன் பேரணி நடைபெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள்தோறும் தேசிய கொடியேற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையொட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற பேரணியில் அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா பங்கேற்றார்.
ஹரியானா மாநிலம் கர்னலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் நயப் சிங் சைனி பங்கேற்று, தேசிய கொடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சிஆர்பிஎஃப் வீரர்கள், இருசக்கர வாகனத்தில் மூவர்ண கொடியுடன் வலம் வந்து, சுதந்திர தினத்தன்று வீடுகள்தோறும் தேசிய கொடியேற்றுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட ரியாசியில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே மேம்பாலத்தில், 750 மீட்டர் நீள பிரம்மாண்ட தேசிய கொடியுடன் மாணவர்கள் அணிவகுத்து சென்றனர்.