பெரம்பலூரில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த கல்லூரி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மக்கள் தொடர்பகம் சார்பில், அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி பெரம்பலூரில் நடைபெற்றது.
இதனை தொடங்கி வைத்த மக்களவை உறுப்பினர் கே.என்.அருண் நேரு, பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம், திறன் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், விழிப்புணர்வு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.