வங்கதேசத்தில் இந்துக்கள் வன்கொடுமை செய்யப்படுவதற்கு எந்த அரசியல் அமைப்பும் குரல் கொடுக்கவில்லை என இந்து முன்னணி தலைவர் வி.பி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்காத பலர் பாலஸ்தீனத்தில் பிரச்சினை என்றால் குரல் கொடுப்பதாக தெரிவித்தார்.
வங்கதேச விவகாரத்தை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள ஜெயக்குமார், அண்டை நாட்டில் மக்கள் பாதிக்கப்படும்போது அதற்கு குரல் எழுப்பக்கூட அனுமதி மறுப்பது வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளார்.
விளம்பரம் செய்வதில் திமுக அரசு மும்முரமாக இருப்பதாக விமர்சித்துள்ள அவர், ஆயிரம் ரூபாயை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.