வங்கதேசத்தில் காணாமல் போன தங்களது குடும்ப உறுப்பினர்களைத் தேடி கண்டுபிடித்து தரக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட இந்துக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
வங்கதேச பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, அங்கு இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.
இந்நிலையில், வங்கதேச அரசின் ஆலோசகர் முகமது யூனஸ் தங்கியிருக்கும் டாக்கா விருந்தினர் மாளிகை அருகே இந்துக்கள் திரண்டு, காணாமல் போன குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை கழுத்தில் தொங்கவிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் அவர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது.