மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
மாஞ்சோலை, குதிரை வெட்டி போன்ற தேயிலைத் தோட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மணிமுத்தாறு அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால், நீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.