தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சிகரல அள்ளி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக இப்பகுதிக்கு முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.