சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி கோ பூஜை நடைபெற்றது.
இதில் 108 பசு, கன்றுகளுக்கு பூஜை செய்து வழிபாடு நடைபெற்று, வெள்ளி நாணயம், வேஷ்டி, சேலை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பசுக்களை வணங்கி அம்மனை தரிசித்தனர்.