செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் செங்கல்பட்டு – சென்னை கடற்கரை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதன் காரணமாக ரயிலில் பணிக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஜி.எஸ்.டி சாலையில் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.