முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு நாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அடல் பிகாரி வாஜ்பாயின் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் அந்த திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.