சென்னை வியாசர்பாடி பகுதியில் பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விற்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடியை சேர்ந்த சத்தியதாஸ் – சியாமளா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3வதாக ஆண் குழந்தை பிறந்தது.
இந்தக் குழந்தை 8 மாத கருவாக இருக்கும் போதே கணவன் மனைவி இருவரிடமும் கணேஷ் மற்றும் சரண்யா தம்பதி 2 லட்ச ரூபாய் கொடுத்ததோடு குழந்தை பிறந்ததும் தங்களிடம் தந்துவிடும்படி கூறியுள்ளனர்.
அதற்கு இருவரும் ஒப்புதல் அளித்த நிலையில் கடந்த 6-ம் தேதி சியமாளவுக்கு ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து ஏற்கெனவே கூறியபடி கணேஷ் – சரண்யா தம்பதியிடம் தந்தை சத்தியதாஸ் குழந்தையை விற்றுள்ளார்.
ஆனால் குழந்தையை பிரிய மனமில்லாத தாய் சியாமளா காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதை தொடர்ந்து சத்தியதாஸை கைது செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.