ஈரோடு மாவட்டம், அந்தியூரில் பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தேவர்மலை செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
நீண்ட தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளதால் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்க்கை வைத்தனர்.