புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் கோவில் ஆடி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
புகழ்பெற்ற இக்கோயிலில் கடந்த 4-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுள் மற்றும் திருவீதி உலா நடைபெற்றது. இந்நிலையில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.