கொல்கத்தா மருத்துவமனை தாக்கப்பட்ட விவகாரத்திற்கு மேற்குவங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இதனை கண்டித்து மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்திய அவர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், மருத்துவமனை தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.