நெல்லையில் பேருந்துகளில் ஜாதிய பாடல்களை ஒலிக்க செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் அவ்வப்போது மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக மாநகர காவல் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஜாதி ரீதியிலான பாடல்களை பேருந்துகளில் ஒலிக்க செய்ய கூடாது என்றும் அவ்வாறு ஒலிக்க செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.