மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பாலத்தில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தின் தடுப்பு மீது அமர்ந்த படி பெண் ஒருவர் இருந்தார். இதக்கண்டு சந்தேகம் அடைந்த கார் ஓட்டுநரும் அருகில் சென்றார். அப்போது திடீரென அந்த பெண் பாலத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றார்.
சமயோஜிதமாக செயல்பட்ட கார் ஓட்டுநர் அந்த பெண்ணின் முடியை பிடித்தபடி கூச்சலிட்டார். இதனைக் கண்ட ரோந்து படையினரும் அந்த பெண்ணை காப்பாற்றினர். இந்நிலையில் துரிதமாக செயல்பட்டு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய கார் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.