பிரான்சில் சாகச நிகழ்ச்சியின் போது விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார்.
ஃபூகா மாஜிஸ்டர் என்ற சிறிய ரக விமானத்தை விமானி ஒருவர் இயக்கி சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டார். அப்போது கடலின் மேற்பரப்பில் வளைவாக திரும்ப முயற்சிக்கும் போது நவீன கோளாறு ஏற்பட்டு விமானம் கடலுக்குள் பாய்ந்தது.
இதைக்கண்ட மீட்புப்படையினர் கடலுக்கு விரைந்தனர். இந்நிலையில் 65 வயதான அந்த விமானி சடலமாக மீட்கப்பட்டார்.