பாரிசில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றில்
இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பாரிசிலிருந்து டெல்லி விமான நிலையம் வந்த அவருக்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மலர்களை தூவி உறவினர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர் . இதனை தொடர்ந்து செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த வினேஷ்போகத் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும் தெரிவித்தார்.