குரங்கம்மை தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக டெல்லியில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா ஆலோசனை மேற்கொண்டார்.
ஆப்பிரிக்கா, காங்கோ. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை தொற்று பரவுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்புபவர்களை கண்காணிக்க விமான நிலையத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக டெல்லியில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆலோசனை நடத்தினார்.
அப்போது குரங்கம்மை பரவலை தடுப்பதற்கான மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.