இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கும்மை பரவல் அதிகரித்தது. அதனைத்தொடர்ந்து இந்த வைரஸ் அண்டை நாடுகளுக்கும் பரவியதையடுத்து பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தியாவில் யாருக்கும் குரங்கம்மைல் அறிகுறி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்நேரத்திலும் பரவல் அதிகரிக்கும் என்பதால் அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.