மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் விழிப்புணர்வு பாடலை பாடி 10 வயது சிறுவன் போக்குவரத்தை சரிசெய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூரைச் சேர்ந்த ஆதித்யா திவாரி என்ற 10 வயது சிறுவன், போக்குவரத்து விதிகள் குறித்த பாடலை தாமே பாடி சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மையான நகரத்தில் இந்தூர் முதலிடத்தில் உள்ளதுபோல, போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில் முதலிடத்திற்கு வரவேண்டி எண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக கூறினார். ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பதே தனது மகனின் விருப்பம் என அவரது தாய் சங்கீதா திவாரி தெரிவித்தார்.