உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில், சீரமைப்பு பணிக்குப் பின்னர் அங்கு ரயில் சேவை தொடங்கியது.
வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கிச் சென்ற சபர்மதி விரைவு ரயில் கான்பூர் அருகே சென்றபோது 22 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச்சென்றன.
இதில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், சீரமைப்பு பணிக்குப் பின்னர் அங்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.