திருச்சி மாவட்டம், காவல்காரன்பாளையத்தில் லாரியில் வைக்கப்பட்டிருந்த 50 லட்ச ரூபாயை திருடிய மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 3-ம் தேதி லாரியில் காய்கறிகளை ஏற்றி சென்ற இருவர் தேனீர் அருந்துவதற்காக காவல்காரன்பாளையத்தில் நிறுத்தியுள்ளனர்.
அப்போது லாரியில் இருந்த 50 லட்ச ரூபாய் மாயமானது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பிரவீன் குமார், இசக்கிமுத்து உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.