ஜம்மு- காஷ்மீர் அப்னி தள கட்சி பிரமுகரும், அம்மாநில முன்னாள் அமைச்சருமான சவுதரி சல்ஃபகர் அலி பாஜகவில் இணைந்தார்.
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, ஜிதேந்திர சிங் முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், சவுதரி சல்ஃபகர் அலி பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.