கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை சம்பவத்துக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொலை செய்யப்பட்ட மருத்துவர் தனது மகளைப் போன்றவர் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.