தாய்லாந்து பிரதமராக பதவியேற்ற பேடோங்தரன் ஷினாவத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையொட்டி, எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாகரீக, கலாசார மற்றும் மக்கள் பிணைப்பை அடிப்படையாக கொண்ட இந்தியா- தாய்லாந்து இடையிலான நட்பை வலுப்படுத்துவதில் தாம் ஆர்வமுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து நாட்டின் பிரதமராக 37 வயதான பேடோங்தரன் ஷினாவத்ராவை அந்நாட்டு அதிபர் நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.