லண்டனில் ஏர் இந்தியா விமானப் பணிப் பெண் மீது தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஏர் இந்தியா விமானப் பணிப் பெண்கள் லண்டனில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தபோது நள்ளிரவில் மர்ம நபர் உள்ளே புகுந்து பணிப் பெண் ஒருவரை சுத்தியலால் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த அந்தப் பெண், சிகிச்சைக்குப் பின்னர் இந்தியா அழைத்து வரப்பட்டார். இதனிடையே, அவரை தாக்கிய மர்மநபர் மீது லண்டன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
















