சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஷாப்பிங் மாலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
நாடு முழுவதும் 30க்கும் மேற்ப்பட்ட ஷாப்பிங் மால்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ள நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஷாப்பிங் மாலுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.