மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
நாட்டின் வளர்ச்சிக்கும் சீர்திருத்தத்துக்கும் நிர்மலா சீதாராமன் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொள்வதாகவும், அவரது நீண்ட நெடிய ஆயுளுக்காக இறைவனை தாம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நிதியமைச்சராக பதவியேற்று, சீரிய முறையில் செயல்பட்டு வரும் தங்களின் து அரசு மற்றும் சமுதாயப் பணிகள் சிறக்க வேண்டும் வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.