புதுச்சேரி ஆரோவில் சுற்றியுள்ள கிராமப்புற மக்களிடையே ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த இளைஞர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
புதுச்சேரி ஆரோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 16-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்ட டென்னிஸ் பால் கிரிக்கெட்டின் இறுதி போட்டி ஆரோவில் பல்மெரியா மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஆரோவில் அறக்கட்டளை துணை செயலாளர் ஸ்வர்ணம்பிகா, IPS அதிகாரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் சிறப்பு விருந்தினர்கள், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழைகளை வழங்கினார்கள்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்வர்ணம்பிகா,
ஆரோவில் கிராமப்புற மக்களிடையே ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த இந்த போட்டி நடத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.
ஆரோவில் பசுமை வழிச்சாலை பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்த நிலையிலும் அதனை சட்டரீதியாக களைந்து, தற்பொழுது அன்னையின் கனவு திட்டமான ஆரோவில் பசுமை வழிச்சாலை பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் சாலை பொது பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்தார்.