திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் அருகே நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நடுநாலுமூலைக்கிணறைச் சேர்ந்த வனம் என்பவர் கட்டட வேலைக்காக குலசேகரப்பட்டினம் நோக்கி சென்றுள்ளார். இதே போல் திருநெல்வேலியைச் சேர்ந்த மகாராஜன் என்பவரும் பணிக்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் எதிரெதிர் திசையில் சென்று கொண்டிருந்த இருவரது இருசக்கர வாகனமும் கல்லாமொழி கிழக்கு கடற்கரை சாலையில் நேருக்கு நேர் மோதியது. இதில் மகாராஜன் மற்றும் வனம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.