சென்னை அருகே பப்பில் நடனமாடிய கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த முகமது சுகைல் என்பவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வந்தார்.
இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்பில் நண்பர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அப்போது முகமது சுகைலை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.