தமிழகத்தில், 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளது.
நாளை ஈரோடு, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.