கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெண் மருத்துவர் கொலை சம்பவத்தைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தவும், 5-க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கும் தடை விதித்து கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் குமார் கோயல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அடுத்த 7 நாட்கள் வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.