ஈரோட்டில் போலி அமெரிக்க டாலர்களை கொடுத்து ஏமாற்றிய நைஜீரியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
தேவம்பாளையத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவர் வெளிநாட்டு கரன்சிகளுக்கு ரூபாய் நோட்டு தரப்படும் என இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார்.
இதனைக் கண்ட நைஜீரியாவைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு என்பவர், 500 டாலர் பணத்தை கொடுத்து, இந்திய பணம் 48 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார்.
பின்னர் பரிசோதனையில் அவை போலி அமெரிக்க டாலர்கள் என தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நைஜீரியாவைச் சேர்ந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.