சேலத்தில் இந்து முன்னணியின் சார்பில், விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் மற்றும் அகண்ட பாரதம் சபதம் ஏற்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
மறவன் அருகில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநிலச் செயலாளர் வெங்கடேஸ்வரன், கோட்டத் தலைவர் சந்தோஷ் குமார், மாவட்டம் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நாட்டை பாதுகாத்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், “பாரத தேசத்தின் ஒற்றுமை காப்போம்” என்றும் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.