கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கழிவுநீர் குழாயை அடைத்தது தொடர்பாக இரு தரப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அம்பராம்பாளையத்தியில் நித்திய பிரியா என்பவர் வீடு வாங்கி குடியேறினார். இவரது வீட்டின் கழிவு நீர் குழாயை பக்கத்து வீட்டுக்காரரான பாவா என்பவர் அடைத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பாவா என்பவர் அனைவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தினர்.