திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால், பாலாற்றில் பாயும் நீர் வெள்ளை நுரை ததும்பி வெளியேறுவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையை பயன்படுத்தி தோல் தொழிற்சாலையினர், கழிவு நீரை ஆற்றில் திறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், மாசடைந்து வரும் நிலத்தடி நீர் மற்றும் குடிநீரை பாதுகாக்கக் கோரி மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.