மயிலாடுதுறை மாவட்டம், திருவிடைக்கழியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாகசாலை அமைப்பதற்கான பந்தல்கால் முகூர்த்த விழா நடைபெற்றது.
இந்த கோவிலின் திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், செப்டம்பர் 15 -ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து கோவிலின் ராஜ கோபுரத்திற்கு வெளிப்புறத்தில் உள்ள விநாயகர் மற்றும் நவகிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.