விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள தோட்டத்துக்குள் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த சுமார் ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் யானை, அழகர் காடு பகுதியில் இருந்த கோபால மூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்குள் நுழைந்துள்ளது.
அப்போது அங்கிருந்த தென்னங்கன்றை தின்றபோது மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக கோபால மூர்த்தியை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.