நெல்லை – தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவை இன்று முதல் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நெல்லையில் இருந்து நாள்தோறும் காலை 7.35 மணிக்கு தூத்துக்குடி வரை செல்லும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதன் மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து தினமும் மாலை 6.25 மணிக்கு நெல்லை வரை செல்லும் ரயில் சேவையை தெற்கு ரயில்வே வழங்கி வந்தது.
இதற்கிடையே பாலக்காடு – நெல்லை இடையே இயக்கப்பட்ட ரயிலானது தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் , நெல்லை – தூத்துக்குடி இடையே தனியாக ரயில் சேவை இனி கிடையாது எனவும், இந்த தடை மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.