ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து குடியரசு துணைத் தலைவர் தனது ‘எக்ஸ்’ பதிவில்,
“ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி அனைவருக்கும் மகிழ்ச்சியான நல்வாழ்த்துகள். இந்நாள், சகோதர – சகோதரிகளுக்கிடையேயான புனிதமான பிணைப்பின் கொண்டாட்டம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும் போற்றுவதற்குமான அர்ப்பணிப்பைக் குறிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த புனிதமான சந்தர்ப்பத்தில், பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் நிலைநிறுத்தவும், அவர்கள் செழித்து வளரவும், அவர்களின் திறனை முழுமையாக உணரவும் ஒரு சூழலை வளர்ப்பதற்கு நாம் உறுதியேற்போம் எனத் தெரிவித்துள்ளார்.