மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் பிறந்தநாளையொட்டி, அவருக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
“தலை சிறந்த மாமன்னர் பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூரின் பிறந்தநாளையொட்டி நான் அவருக்கு மரியாதை செலுத்தினேன்.
திரிபுராவின் வளர்ச்சியில் அவர் மறக்க முடியாத பங்களிப்பை வழங்கியுள்ளார். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிப்பதற்காக தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டவர் அவர்.
பழங்குடியின சமுதாயத்தினரின் நலனுக்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், பெரிதும் போற்றப்படுகின்றன. திரிபுராவின் முன்னேற்றத்திற்கான அவரது தொலைநோக்கு சிந்தனைகளை நிறைவேற்ற எங்களது அரசு உறுதிபூண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.