சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரின் சகோதரரான தனபால் கைது செய்யப்பட்டார்.
தாரமங்கலம் அருகே காவல் உதவி ஆய்வாளர் அழகு துரை உள்ளிட்டோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தனபால், தன் மீது மேச்சேரி காவல் நிலையத்தில் வழக்கு போட உடந்தையாக இருந்ததாக கூறி காவல் உதவி ஆய்வாளரை தாக்கியுள்ளார்.
அப்போது தாக்குதலை தடுக்க வந்த பிற போலீசாரையும் தனபால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனபால் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.