ரக்ஷா பந்தனையொட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது மாணவர்களுக்கு ராக்கி கட்டி திரெளபதி முர்மு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜெயந்த் செளதரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அர்ஜுன்ராம் மேக்வால், பியூஷ் கோயல் ஆகியோரை பெண்கள், மாணவர்கள் சந்தித்து ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல ஹைதராபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அமராவதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கும் பெண்கள் ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தனர்.