டெல்லியில் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பொதுத் துறை வங்கிகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நிதி சேவைகள் துறை செயலர் விவேக் ஜோஷி மற்றும் மேலாண் இயக்குநர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.