கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர், தங்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது நம்பிக்கையில்லை என தெரிவித்துள்ளனர்.
ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அவர்கள் அளித்த பேட்டியில், தங்கள் மகளின் சாவுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கால்பந்து ரசிகர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதன்மூலம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீதான நம்பிக்கையை தாங்கள் இழந்துவிட்டதாகவும், சிபிஐதான் இந்த வழக்கை முறையாக விசாரித்து வருவதாகவும் பெண் மருத்துவரின் பெற்றோர் கூறினர்.