பெங்களூரில் செவிலியர் மாணவிகள் விடுதியில் எலி மருந்து தெளிக்கப்பட்டதால், 19 பேருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், மூன்று பேர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாணவிகள் விடுதியில் எலி மருந்து தெளித்த விடுதி நிர்வாகம் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.