மதுரையில் மதுபோதையில் வாகனங்களை தள்ளிவிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட நகைக்கடை உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
மதுரை நகை கடை பஜார் பகுதியில் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைக் தட்டிக்கேட்ட நகைக்கடை உரிமையாளரை மர்மகும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.