தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நிலத்தகராறில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஏரியூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த விசாரணைக்காக இரு தரப்பினரும் ஏரியூர் காவல் நிலையத்தில் ஆஜராக வந்தனர்.
அப்போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர சரமாரியாக தாக்கிக் கொண்டதில் சிலர் காயமடைந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்க்காக சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.