கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர், பெண்ணின் துரிதமான செயல்பாட்டால் விபத்தில் சிக்கினார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த சந்தோஷ்குமாரும், அவரது மனைவி சுதாவும், குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆலப்பாக்கம் அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், சுதாவின் சங்கிலியை பறிக்க முயன்றனர்.
விரைந்து செயல்பட்ட சுதா, சங்கிலியை உறுதியாக பிடித்துள்ளார். இதன் காரணமாக, சங்கிலியை பறிக்க முயன்ற நபர் விபத்தில் சிக்கினார். அதே சமயம், சந்தோஷ்குமாரும், அவரது மனைவி சுதாவும் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர்.
தற்போது கணவன் மனைவி மட்டுமின்றி செயினை பறிக்க முயன்ற நபரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, புதுச்சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.